பாலாவுக்கு செக் வைத்த கேபி - கட்டியணைத்து பாராட்டிய ரியோ | Bigg Boss 4 Tamil | Promo 1

Bigg Boss Day 81 Promo 1 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் 81ஆவது நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் தங்கநிற பந்தை பிடிப்பவர்கள் பக்கத்தில் இருக்கும் போர்டில் இருந்து ஒரு கார்டை எடுத்து அதிலுள்ள சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அப்படி கார்டை எடுத்த ரம்யா ரியோவின் மதிப்பெண்களை பூஜ்ஜியம் ஆக்குகிறார். அதன்பின்னர் கேபி பாலாவிற்கு எதையோ செய்கிறார்.

கேப்ரெல்லா இவ்வாறு செக் வைத்ததும் ரியோ அவரை கட்டியணைத்து பாராட்டுகிறார். இதனால் கடுப்பான பாலாஜி கேபி அடுத்த ஜூரோ நீதான் என கூறுகிறார்.