Bigg Boss Day80 Promo3

ஆரி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ரியோ எழுந்து சென்றதால் நெட்டிசன்கள் அவரை விளாசி வருகின்றனர்.

Bigg Boss Day80 Promo3 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 4-வது சீசனுக்கான மூன்றாவது புரோமோ இன்று வெளியாகி உள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் ஆரி மற்றும் ரியோ இடையே வாக்குவாதம் தொடர்கிறது. முதலிடம் எனக்குத்தான் என இருவரும் வாதத்தில் ஈடுபடுகின்றனர்.

ஆரி நான் ஒரு பாலை தான் விட்டேன் நீங்க 3 பாலை விட்டீர்கள். இதற்கு ஒரு பதிலை சொல்லிட்டு போங்க என கூறுகிறார்.

அதற்கு ரியோ அதெல்லாம் சொல்ல முடியாது இரண்டாவது இடத்தை எடுத்துக்கோங்க என அந்த இடத்தை விட்டு எழுந்து சென்று விடுகிறார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பதில் சொல்லிட்டு போங்க ரியோ என அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

https://twitter.com/Bubbly_Girl__/status/1341677639065432064?s=19