Bigg Boss Day80 Promo1

பிக்பாஸ் டாஸ்க் கடுமையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த டாஸ்கிங் போது பாலாஜி முருகதாஸ் சறுக்கி கீழே விழுந்துள்ளார்.

Bigg Boss Day80 Promo1 : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

80-வது நாளான இன்றைக்கான முதல் புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட இருந்த பால் கேட்ச் டாஸ்க் தற்போது கடமையாக்கப்பட்டுள்ளது.

அதாவது போட்டியாளர்கள் அவர்களின் அன்றாட வேலையை செய்து கொண்டிருந்தார்கள். திடீரென எல்இடி டிவியில் அவர்களின் பெயர் ஒலிக்கும் போது ஓடிச் சென்று பாலை பிடிக்க வேண்டும்.

பாலாவின் பெயர் ஒலிக்க அவர் ஓடியபோது சறுக்கி கீழே விழுந்துள்ளார். இதோ அந்த வீடியோ