Bigg Boss Day76 Promo2

அர்ச்சனாவுக்கு பல்பு கொடுக்கும் வகையில் பேசியுள்ளார் கமல்ஹாசன்.

Bigg Boss Day76 Promo2 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

76 ஆவது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான இரண்டாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் அர்ச்சனா சோம் மற்றும் கேப்ரில்லா ஆகியோர் ஒன்றாக இணைந்து பேசி வைத்தது போல அனிதாவை நாமினேட் செய்தனர்.

இதுகுறித்து அர்ச்சனா சமீபத்திய எபிசோடில் சில விஷயங்களைப் பேசினார். அது குறித்து கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்கள் நம்பர் கேம் விளையாட தொடங்கிவிட்ட நீங்க அவ்வளவுதான் என அர்ச்சனாவை எச்சரித்துள்ளார் கமல்ஹாசன்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

அதேசமயம் ரசிகர்கள் ப்ரோமோவில் மட்டும் இப்படி பேசிட்டு முழு எபிசோட்டில் மொக்க பண்ணிடாதீங்க ஆண்டவரே எனவும் கூறி வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ