Bigg Boss Day75 Promo2

இந்த வீட்டு போட்டியாளர்களின் கண்ணீரில் உண்மையும் இருக்கு பொய்யும் இருக்கு என கூறியுள்ளார் ரம்யா பாண்டியன்.

Bigg Boss Day75 Promo2 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் ஒளிபரப்பாகிறது.

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் பிக்பாஸ் ரம்யா பாண்டியனை கண்பெக்ஷன் ரூமிற்கு அழைத்து பேசுகிறார்.

அப்போது நான் ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவருடன் கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் செய்வேன் என கூறியுள்ளார்.

இதுவரைக்கும் அன்பு, கோபம் என எல்லாத்தையும் அப்படியே காட்டி இருக்கேன் என நினைக்கிறேன்.

பிக்பாஸ் ரம்யாவிடம் சக போட்டியாளர்கள் குறித்து கேட்கிறார். அதற்கு ரம்யா பதில் சொல்லாமல் நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா என கேட்கிறார்.

இதனால் பிக் பாஸ் நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லவே இல்லையே என கூறுகிறார். இதை வைத்து அனிதா ரம்யா பாண்டியனை கலாய்த்துள்ளார்.