Bigg Boss Day64 Promo3

உனக்கு சிவானி இருக்கா எனக்கு அதுகூட இல்லை என ஆரி பாலாஜி பேசிக்கொள்ளும் வீடியோ ப்ரோமோவாக வெளியாகியுள்ளது.

Bigg Boss Day64 Promo3 : கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் இன்று 64-வது நாள் ஒளிபரப்பாக உள்ளது.

இதற்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் ஆரி மற்றும் பாலாஜி இருவரும் பேசிக் கொள்கிறார்கள்.

ஆரி பாலாஜிக்கு ஒரு அட்வைஸ் கொடுக்கிறார். அப்போது பாலாஜி ஒரு கட்டத்தில் யாரும் இல்லாத போது நமக்கு பேசுவார் ஒரு ஆள் தேவைப்படும் என கூறுகிறார்.

அதற்கு ஆரி உனக்கு சிவானி இருக்கா எனக்கு யார் இருக்கா என கூறுகிறார். பாலாஜி அவளையும் ஒருநாள் பேக் பண்ணி அனுப்பிடுவாங்க எனக்கு கூறி இதுவரை நடந்ததற்காக ஆரியிடம் மன்னிப்பும் கேட்கிறார்.

இந்த புரோமோ வீடியோவில் பிஜிஎம் மியூசிக்காக விக்ரம் வேதா மியூசிக் பிளே செய்யப்பட்டுள்ளது. இதோ பாருங்க