Bigg Boss Day61 Promo3

பிக் பாஸ் கொடுத்த புதிய டாஸ்க்குக்கு பதில் சொல்ல முடியாமல் போட்டியாளர்கள் திக்குமுக்காடும் வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day61 Promo3 : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் 61வது நாள் இன்று ஒளிபரப்பாகிறது.

இதற்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இதுவரை 60 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் நீங்கள் இந்த வீட்டில் செய்தது என்ன என கேள்வி எழுப்புகிறார்.

போட்டியாளர்கள் ஒவ்வொருவராக தங்களது செயல்பாடுகள் குறித்து பேச வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸின் இந்தக் கேள்விக்கு போட்டியாளர்கள் அனைவருமே பதில் சொல்ல முடியாமல் திக்குமுக்காடும் வீடியோ தான் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ பாருங்க