Bigg Boss Day58 Promo3

அர்ச்சனாவிடம் ஆஜித் கேட்ட கேள்வி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்றே கூறலாம்.

Bigg Boss Day58 Promo3 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் அறுபதாவது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தற்போதைய பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு கால் சென்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டாஸ்க் நிறைவை ஒட்டி வரும் இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோ வீடியோவில் ஆஜித் அர்ச்சனாவிற்கு போன் செய்து சில கேள்விகளை கேட்கிறார்.

அதாவது நீங்கள் வந்த புதிதில் உங்கள் எல்லாரையும் டப்பான போட்டியாளராக பார்த்தோம். ஆனால் தற்போது அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.

இப்போதெல்லாம் டாஸ்க் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். அதேசமயம் அடிக்கடி நான் வெளியே சென்று விடுகிறேன் என கூறுகிறீர்கள்.

இப்போது உங்கள் மனநிலை என்ன விளையாடி ஜெயிக்கணும் நினைக்கிறீர்களா இல்ல வீட்டிற்கு போக ஆசைப்படுகிறீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆஜித் கேட்ட கேள்வி மிகச் சரியான கேள்வி என ரசிகர்கள் பலரும் கமெண்ட்டுகளில் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.