Bigg Boss Day52 Promo3

ரம்யா பாண்டியன் கேட்ட ஒரு கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திக்கு முக்காடியுள்ளார் ஜித்தன் ரமேஷ்.

Bigg Boss Day52 Promo3 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் 3 சீசன் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இன்று இந்த நிகழ்ச்சியின் 52வது நாள் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் ரம்யா பாண்டியன் ஜித்தன் ரமேஷ்க்கு போன் செய்து என்னை நாமினேட் செய்ய காரணம் என்ன எனக் கேட்கிறார்.

அதற்கு ஜித்தன் ரமேஷ் நீங்கள் சைலன்ட் கில்லர் அமைதியா இருந்தே ஊசி குத்தற மாதிரி குத்துவீங்க என கூறுகிறார்.

அதன் பிறகு நிஷாவை நாமினேட் செய்ய இரண்டு காரணங்கள் கூறுங்கள் என கூறுகிறார் ரம்யா. நிஷா ஒருவரை சார்ந்தே இருப்பதாக ஒரு காரணத்தை கூறி விடுகிறார் ஜித்தன் ரமேஷ்.

அதன் பிறகு இன்னொரு காரணத்தை அவரால் கூற முடியாமல் திக்குமுக்காடுகிறார். நிஷா தன்னுடைய குரூப்பை சேர்ந்தவர் என்பதால் ரமேஷ் அவரால் பேச முடியாமல் திக்குமுக்காடி உள்ளார்.