Bigg Boss Day51 Promo2

முதல் முறையாக இதுவரை இல்லாத ஒரு விஷயத்தை பிக் பாஸ் கொண்டு வந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாலாஜி அர்ச்சனாவை நாமினேட் செய்துள்ளார்.

Bigg Boss Day51 Promo2 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 3 சீசன்கள் முடிந்து தற்போது 4வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இதுவரை நான்கு பேர் வெளியாகியுள்ள நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் இன்று நடைபெற உள்ளது. ஏற்கனவே வெளியான முதல் புரோமோ வீடியோவில் யார் யார் நாமினேட் ஆனவர்கள் என்பது குறித்து அறிவிக்கப்பட்டது.

தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் நாமினேட் ஆனவர்கள் நாமினேட் ஆகாத ஒருவரை நாமினேட் செய்யும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இதனை பயன்படுத்தி பாலாஜி முருகதாஸ் அர்ச்சனாவை நாமினேட் செய்கிறார். நிஷா அவரது குரூப்பைச் சார்ந்த ஆஜித்தையே நாமினேட் செய்கிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.