Bigg Boss Day51 Promo2

Bigg Boss Day51 Promo2 :என்னை அக்கானு கூப்பிடாத அர்ச்சனா எச்சரிக்க சரி அர்ச்சனா என கூலாக பதில் அளித்துள்ளார் பாலாஜி முருகதாஸ்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசன் 51வது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது. போட்டியாளர்களுக்கு கால் சென்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் புரோமோ வீடியோவில் பாலாஜி மற்றும் அர்ச்சனா இடையே நடந்த பேச்சுவார்த்தை குறித்த வீடியோ வெளியாகி இருந்தது.

இதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் கேபி, பாலாஜியிடம் சண்டையிட பாலாஜி எல்லாரும் என்னுடைய பெயரை கெடுக்க பாக்கறீங்க எனக் கூறுகிறார்.

மேலும் அர்ச்சனா மற்றும் பாலாஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இந்த வாக்குவாதத்தில் பாலாஜி முருகதாஸ் அர்ச்சனா என பெயர் சொல்லிக் கூப்பிட்டு மீண்டும் ஒருமுறை கூறும் போது அர்ச்சனா அக்கா என கூறுகிறார்.

அப்போது அர்ச்சனா இனி என்ன அக்கான்னு கூப்பிடாத நான் அர்ச்சனா, அர்ச்சனானு மட்டும் கூப்பிடு என பதில் அளிக்கிறார். அதற்கு பாலாஜி முருகதாஸ் சரி அர்ச்சனா என கூலாக பதில் அளித்துள்ளார்.