Bigg Boss Day51 Promo 1

சனம் செட்டி பேச்சால் ஆரி கடுப்பாகி விட்டது போலவும் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ள போட்டியாளர்கள் யார் யார் என்பது பற்றியும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day51 Promo 1 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் 3 சீசன் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இதுவரை ரேகா வேல்முருகன் சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் சுச்சித்ரா என நான்கு பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அடுத்த வாரம்பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வருகிறது.

அதற்கான நாமினேசன் இன்று நடைபெற உள்ளது. இதற்கான முதல் ப்ரோமோ வீடியோவில் அந்தச் சந்திப்பில் ஆதி செல்லும் போது சனம் ஒரு நிமிடத்தில் பேசி முடித்து விட்டு வருவார் என கூற ஆரி இதனால் கடுப்பாகி உள்ளார்.

மேலும் இந்த வார நாமினேஷன் பட்டியலில் பாலாஜி முருகதாஸ், ஆரி, ரமேஷ், நிஷா, அனிதா, சனம், சோம் உள்ளிட்டோர் நாமினேட் ஆகியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.