Bigg Boss Day25 Emotional Promo

பிக்பாஸ் கொடுத்துள்ள டாஸ்க்கால் போட்டியாளர்கள் அனைவரும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

Bigg Boss Day25 Emotional Promo : உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தொடங்கி 20 நாட்கள் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு மறக்க முடியாத நினைவுகள் குறித்துப் பேச வேண்டும் என டாஸ்க் கொடுத்துள்ளார்.

ரம்யா பாண்டியன் பேசும்போது அர்ச்சனா எனக்கு ஆரத்தி எடுக்கும் போது அம்மா நினைவு வந்தது என அழுதுள்ளார்.

சம்யுக்தா தன்னுடைய கணவர் பற்றி பேசி கண்கலங்கி உள்ளார். அதேபோல் மொட்டை தாத்தா சுரேஷ் சக்ரவர்த்தி அவர்கள் பாலாஜி பார்க்கும் போது தன் மகன் ஞாபகம் வருவதாக கண்கலங்கி உள்ளார்.

இதனால் பிக் பாஸ் வீட்டில் இன்றைய நிகழ்ச்சி மிகவும் எமோஷனலாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://twitter.com/SataSathiesh/status/1321656927034617856?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.