Bigg Boss Day102 Promo2

பிக் பாஸ் வீட்டை விட்டு பண பெட்டியுடன் யார் வெளியேறுவார். வெளியான இரண்டாவது ப்ரோமோ.

Bigg Boss Day102 Promo2 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் வீட்டிற்கு வருகை தந்திருக்கும் நிலையில் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

பணத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுபவர் வெளியேறலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ரம்யா பாண்டியன் தான் பண பெட்டியுடன் வெளியே வருவார் என்று வெளியான நிலையில்,
இன்றைய ப்ரோமோவில் யாரும் எதிர்பார்க்காத விதமாக ஆரி பணப்பெட்டியின் அருகில் சென்று நிற்கிறார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆரி பண பெட்டியுடன் செல்வாரா இல்லை வேறு எந்த போட்டியாளர் செல்வார்கள் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.