Bigg Boss Celebrities Night Party Photos

இரவு பார்ட்டிக்கு சென்று புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர் பிக் பாஸ் பிரபலங்கள்.

Bigg Boss Celebrities Night Party Photos : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

அதில் டைட்டில் வின்னர் ஆக ஆரி, ரன்னர் ஆக பாலாஜி முருகதாசும் இடம்பெற்றனர். பிக் பாஸ் முடிந்த நிலையில் அனைவரும் அன்றாட வேலையை பார்க்க தொடங்கினர்.

ஆனால் இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் பிரபலங்கள் போட்டியாளர்களின் வீட்டுக்குச் சென்று சர்ப்ரைஸ் கொடுத்தும் வருகின்றனர்.

மேலும் பிக்பாஸ் பிரபலங்களான ஆஜித், ரம்யா பாண்டியன், சம்யுக்தா, பாலாஜி முருகதாஸ், ஷிவானி ஆகியோர் இரவு பார்ட்டிக்கு சென்று புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர்.

இந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.