Bigg Boss Celebrities in Archana Home Function

அர்ச்சனா வீட்டில் நடைபெற்ற விசேஷத்திற்கு பிக் பாஸ் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்‌.

Bigg Boss Celebrities in Archana Home Function : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் தான் நிறைவு பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்தவர் அர்ச்சனா. இவர் இந்த வீட்டில் அன்பு டீம் ஒன்றை உருவாக்கி வழி நடத்தி வந்தார்.

இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் நான் நானாக தான் இருந்தேன் என தெரிவித்திருந்தார். ஆனாலும் அர்ச்சனாவிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது.

தற்போது அர்ச்சனா வீட்டில் அவருடைய தங்கைக்கு சீமந்தம் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.