Bigg Boss Aari Reveled About Thala Ajith Political Entry..!

YouTube video

Ajith Fans Waiting to Valimai : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஆகியும் படக்குழு படம் பற்றி எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் அமைதியாகவே இருந்து வருகிறது.

ரசிகர்கள் தொடர்ந்து அனைவரிடமும் வலிமை அப்டேட் எப்போது வெளியாகும் என கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். இந்த நிலையில் தல அஜித் ரசிகர் ஆட்டோவில் வலிமை அப்டேட்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என்ற வாசகத்தை எழுதியுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.