Bigg Boss Aari Photo

நீளமான முடியுடன் பிக் பாஸ் ஆரியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bigg Boss Aari Photo : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் ஆரி. சில படங்களில் நாயகனாக நடித்துள்ள இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று டைட்டிலையும் வென்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஆறு படங்களில் பிசியாக நடிக்க தொடங்கிவிட்டார். தற்போது இவர் நடித்துவரும் புதிய படத்திற்காக நீளமான முடியுடனும் தன்னுடைய கெட்டப்பை மாற்றி உள்ளார்.

அது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.