Bigg Boss Aari About Ajith

தல அஜித் அரசியலுக்கு வரமாட்டார் ஆனால் அவரிடம் தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை ஒரு வரைபடம் ஆகவே உள்ளது என பிக் பாஸ் ஆரி பேசியுள்ளார்.

Bigg Boss Aari About Ajith : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். நடிப்பது மட்டுமே தொழில் என இல்லாமல் யாருக்கும் தெரியாமல் தொடர்ந்து பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார் தல அஜித்.

மேலும் இவர் பல ஏழை எளிய மக்களுக்கு வெளியில் தெரியாமல் உதவியுள்ளார். இந்த விஷயங்கள் அவருடன் இருந்த யாராவது ஒருவர் வெளியே சொன்னால் தான் தெரியும். அந்த அளவிற்கு ரகசியமாக தன்னால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்து வருகிறார்.

இதனால் தல அஜித் அரசியலுக்கு வந்தால் தமிழகத்தின் வளர்ச்சி நன்றாக இருக்கும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அஜித்தோ வரிசையில் நின்று ஓட்டு அளிப்பது எனது ஜனநாயக கடமை. அதோடு எனக்கும் அரசியலுக்குமான உறவு முடிந்து விட்டது என இருந்து வருபவர்.

ஆனாலும் தல அஜித் தமிழகத்தின் வளர்ச்சிக்காக திட்டங்களை வரைபடமாக உருவாக்கியிருப்பதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஆரி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

ஆரி பேசிய இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

https://twitter.com/EliteAJITHIANS/status/1347430505403150338?s=19
https://twitter.com/sundarraaj901/status/1347446336694611968?s=19