இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவர் இவர் தான் - வெளியான அதிரடி தகவல்.!! | Sanam Shetty

Bigg Boss 6th Eviction Update : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா மற்றும் சம்யுக்தா ஆகியோர் வெளியேற்றப்பட்டு உள்ள நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் ஆரி, அனிதா, ஆஜித், சனம் ஷெட்டி, நிஷா, ஷிவானி நாராயணன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இவர்களில் அனிதா, ஆஜித் மற்றும் சனம் ஷெட்டி ஆகியோர்கள் தான் மிகக் குறைவான ஓட்டுகள் பெற்று இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் தற்போது மிக மிக குறைவான ஓட்டுக்கள் பெற்றதாக சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.