Bigg Boss 4th Eviction Analysis

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Bigg Boss 4th Eviction Analysis : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் 3 சீசன் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

நான்காவது சீசனில் இதுவரை ரேகா வேல்முருகன் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி என மூவர் வெளியேற்றப்பட்டுள்ளனர். நான்காவது எவிக்ஷன் இந்த வாரம் நடைபெற உள்ளது.

இந்த வார வெளியேற்றத்திற்காக சுசித்ரா, பாலாஜி, அனிதா, ஆரி, சம்யுக்தா, ரியோ, சோம் சேகர் என 7 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் தற்போதைய நிலவரப்படி பாடகி சுசித்ரா தான் குறைவான ஓட்டுக்கள் பெற்றிருப்பதாகவும் அவர் இந்த வாரம் இந்த வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

சுசித்ரா பாலாஜிக்கு மட்டுமே ஆதரவாக பேசியதால் அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினால் மகிழ்ச்சிதான் என ரசிகர்களும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.