YouTube video

Bigg Boss 4 Title Winner : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை நான்காவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் இன்றோடு முடிவுக்கு வந்தது.

இந்த நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே இன்று மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் பழைய போட்டியாளர்கள், போட்டியாளர்களின் குடும்பத்தினர் ஆகியோர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 4-ன் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன் தான் என உலக நாயகன் கமல்ஹாசன் அறிவித்து அவருக்கு ட்ராபியை வழங்கினார்.

அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியின் ரன்னர் பாலாஜி முருகதாஸ் எனவும் அறிவித்தார். பல்வேறு சர்ச்சைகள், சண்டைகள் என பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிகழ்ச்சி இன்றோடு முடிவுக்கு வந்தது மக்களுக்கும் மகிழ்ச்சி தான்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.