Bigg Boss 4 Telecast Time Update

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bigg Boss 4 Telecast Time Update : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன் முடிவடைந்து நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

விஜய் டிவியில் தினமும் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இப்படியான நிலையில் விஜய் டிவி பழைய சீரியல்களின ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம் செய்துள்ளது.

அதன்படி இனி பிக்பாஸ் நிகழ்ச்சி இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகும் என தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் ராஜா-ராணி-சீரியலின் இரண்டாம் பாகம் இரவு 9.30 மணிக்கு தென்மொழி பிஏ என்ற சீரியல் மதியம் 1.30 மணிக்கும் பாவம் கணேசன் சீரியல் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் எனவும் தெரிவித்துள்ளது.