YouTube video

Shivani Vs Nisha in Bigg Boss : தமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்கள் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ஒருவராக ஷிவானி நாராயணன் பங்கேற்றுள்ளார்.

இதுவரை இவர் தன்னுடைய டாஸ்க்காக பாலாஜி பின்னாடி சுத்துவது, அவருக்கு ஊட்டி விடுறது போன்ற வேலைகளை மட்டும் தான் செய்து வந்தார்.

Shivani Vs Nisha in Bigg Boss

முதல் முறையாக நேற்று நடந்த மணிக்கூண்டு டாஸ்க்கில் நிஷா அர்ச்சனா, உள்பட பல போட்டியாளர்களிடம் வம்பிழுத்து சண்டையிட்டார்.

அப்போது ஷிவானி ரவுடி பேபியாக இறங்கி நிஷாவிடம் சண்டையிட்டு உள்ளார். அதுமட்டுமல்லாமல் நிஷாவின் வீக் பாயிண்ட்டை கண்டு பிடித்து அவரது இடுப்பில் கை வைத்து விடுவேன் என கூறி அவரை தெறித்து ஓட வைத்துள்ளார்.

நம்ம மிக்சர் திண்ணினு நினைச்ச ஷிவானியா இது என நெட்டிசன்கள் வியந்து போயுள்ளனர். இப்படி ஆக்டிவா இருக்க ஷிவானியை தான் எங்களுக்கு பிடித்திருக்கு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.