இந்த வாரம் மட்டும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறப் போவதாக தகவல்கள் கிடைக்கின்றன.
Bigg Boss 4 Next Eviction Update : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இதுவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து 4 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களை தொடர்ந்து அடுத்த வார வெளியேற்றுவதற்காக நாமினேஷன் இன்று நடைபெறவுள்ளது.
நாமினேசன் லிஸ்ட்டில் இடம் பெற்றவர்கள் மீண்டும் சில போட்டியாளர்களை நாமினேட் செய்கின்றனர். இந்த காட்சிகள் இங்கே வெளியான புரோமோ விடியோக்களில் இடம்பெற்றிருந்தன.
இப்படியான நிலையில் தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த இரண்டு பேர் யார் யாராக இருப்பார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.