Bigg Boss 4 Contestants Education Details

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வார வெளியேற்றுவதற்காக 11 நபர்கள் நாமினேட் ஆகியுள்ள நிலையில் அவர்களின் ஓட்டிங் நிலவரம் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன.

Bigg Boss 4 3rd Eviction Analysis : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் 3 சீசன் முடிந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த வார வெளியேற்றத்திற்காக மொத்தம் 11 நபர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள்

பாலாஜி முருகதாஸ்
ரம்யா பாண்டியன்
ஆஜித்
ரியோ
நிஷா
ரமேஷ்
சுரேஷ் சக்ரவர்த்தி
சோம் சேகர்
அனிதா சம்பத்
சனம் ஷெட்டி
வேல்முருகன் ஆகும்.

இவர்களில் தற்போதைய ஓட்டிங் நிலவரப்படி பாலாஜி முருகதாஸ் அதிகமான ஓட்டிங் பெற்று முதலிடத்தில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அவருக்கு அடுத்ததாக ரியோ, நிஷா, ரமேஷ் சுரேஷ் சக்ரவர்த்தி சோம் சேகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த பதினோரு பேரில் வேல்முருகன் சனம் ஷெட்டி மற்றும் அனிதா ஆகியோர் தான் குறைவான ஓட்டுக்கள் பெற்று உள்ளனர். அதிலும் குறிப்பாக சனம் ஷெட்டி மற்றும் வேல்முருகன் ஆகியோர் ஓட்டு மிக மிக குறைவாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் இவர்கள் இருவரில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இல்லை என்றால் அனிதா சம்பத் வெளியேறுவார் எனவும் கூறப்படுகிறது.

இந்த மூவரில் இந்த வார இறுதியில் வெளியேறப் போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.