Bigg Boss 3 Telecast
Bigg Boss 3 Telecast

பிக்பாஸ் குறித்த அறிவிப்பை விஜய் டிவி வெளியிட ரசிகர்கள் கோரிக்கை ஒன்றை வைத்து வருகின்றனர்.

Bigg Boss 3 Telecast : கொரானா வைரஸ் காரணமாக இந்தியா 21 நாட்களுக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெள்ளித்திரை சின்னத்திரை என எதிலும் ஷூட்டிங் நடைபெறுவதில்லை.

கூவி கூவி டீ, காபி விற்கும் மைனா நந்தினி… உங்களுக்கா இந்த நிலைமை – இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

இந்த காரணத்தினால் இதுவரை கைவசம் இருந்த சீரியல் எபிசோடுகள் ஒளிபரப்பாகி விட்டன. தற்போது புதிய எபிசோடுகள் என்ன செய்வது என தெரியாமல் தவித்த டிவி சேனல்கள் பழைய சீரியல்களையும் நிகழ்ச்சிகளையும் மீண்டும் ஒளிபரப்ப தொடங்கியுள்ளன.

விஜய் டிவி இறுதியாக ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3- ஐ மீண்டும் ஒளிபரப்ப போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் இந்த முறையாவது எதையும் வெட்டாமல் ஒளிபரப்புங்கள் என கூறி வருகின்றனர்.

ஆனால் இதெல்லாம் நடக்க வாய்ப்பில்லை என்பது தான் உண்மை.