Bigg Boss 3 : Kamal Haasan's Idea to increase the TRP of Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Bigg Boss Tamil 3 Contestants
நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பையும் TRP-யையும் எகிற வைக்க பிக் பாஸ் டீமுக்கு ஐடியா ஒன்றை கொடுத்துள்ளாராம் கமல்ஹாசன்.

Bigg Boss 3 : சின்னத்திரையில் அறிமுகமாகி கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய புத்தம் புதிய நிகழ்ச்சி பிக் பாஸ். இரண்டு சீசன்களின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது சீசன் தொடங்க உள்ளது.

இந்த சீசனை எப்படியாவது வெற்றி பெற வைத்து விட வேண்டும் என தொலைக்காட்சி சேனல் சர்ச்சைக்குரிய பிரபலங்களை தேடி தேடி உள்ளே அனுப்ப உள்ளனர்.

21 வயதிலேயே நடந்த திருமணத்தால் அந்த விசியம் தெரியாமலே போய் விட்டது – அதிதி ராவ் ஓபன் டாக்.!

இதன் ஒரு பகுதியாக கமல்ஹாசனும் பிக் பாஸ் டீமுக்கு ஐடியா ஒன்றை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது மூன்றாம் பாலினத்தவர் ஒருவரையாவது பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார்.

மற்ற மொழி பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் இது போன்று செய்து வெற்றியை குவிந்ததால் கமலும் இதே வழியை பின்பற்றலாம் என பரிந்துரை செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.

பிக் பாஸ் 3-ல் போட்டியாளரான 90 Ml நடிகை – சரியா போச்சு போங்க.!

இதனால் கலர்ஸ் தமிழ் பாடகி சாக்க்ஷி,தர்மதுரை ஜீவா, அருவி அஞ்சலி ஆகியோரிடம் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் இவர்களில் நிச்சயம் ஒருவர் உள்ளே அனுப்பபடுவார்கள் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

Bigg boss 3

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.