Bigg Boss4 19th Contestants

50-ஆவது நாளில் பிக்பாஸ் வீட்டிற்குள் பிரபல நடிகர் ஒருவர் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Bigg Boss4 19th Contestants : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் இதுவரை ரேகா, வேல்முருகன் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி என மூவர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இன்று நாற்பத்தி நான்காவது நாள் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நேரத்தில் அதாவது 50-ஆவது நாளில் பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய போட்டியாளராக முஹம்மத் அசீம் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் பிக் பாஸ் போட்டியாளரான சிவானியுடன் இணைந்து இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.