Bigg Boss 12th Eviction Analysis

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

Bigg Boss 12th Eviction Analysis : தமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் படு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி நாமினேஷன் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.

போட்டியாளர்கள் அனைவரும் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர். அதாவது ஆரி, ரியோ, பாலாஜி முருகதாஸ், சோம் சேகர், ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன் என அனைவரும் நாமினேஷனில் இடம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது வரை கிடைத்துள்ள ஓட்டுகளின் படி ஷிவானி நாராயணன் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டபுள் எவிக்ஷனாக இருந்தால் ரம்யா பாண்டியன் அல்லது சோம் சேகரும் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.