Bhoomi Movie Trailer Release

மாஸ்டர் படத்துடன் பொங்கலில் பூமி திரைப்படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

Bhoomi Movie Trailer Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் இறுதியாக கோமாளி மற்றும் அடங்க மறு உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து இவர் லட்சுமனன் இயக்கத்தில் பூமி என்ற படத்தில் நடித்துள்ளார். அரசியல் மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்சனைகளை பேசும் இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்டு வந்தது.

Jayam Ravi Nidhhi Agerwal Bhoomi Movie HD Pics

திரையரங்குகளில் இன்னும் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிடாத நிலையில் இந்த படத்தை ஹாட்ஸ்டாரில் வெளியிட இருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அந்த அறிவிப்பை தொடர்ந்து இன்று புதிய போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. அதில் பூமி திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாக இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே பொங்கலில் தான் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.