YouTube video

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகியுள்ள பூமி படம் எப்படி இருக்கு என்பது குறித்த விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Bhoomi Movie Review : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் லட்சுமண் இயக்கத்தில் ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஹாட்ஸ்டார் விஐபி வழியாக வெளியாகியுள்ள திரைப்படம் தான் பூமி.

நாசா விஞ்ஞானியான ஜெயம் ரவி இந்தியாவின் வளம் அந்நிய நாடுகளில் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருவதை அறிந்து தன்னுடைய நாசா பணியையும் தன் அவையில் கைவிட்டு இயற்கை விவசாயத்தில் இறங்கி எப்படி ஜெயித்து காட்டுகிறார்? இவர் இயற்கை விவசாயம் பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பதால் இவருக்கு என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது அதனை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதைக்களம.

நடிப்பு :

ஜெயம் ரவி வழக்கம் போல இந்த படத்திலும் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஒன் மேன் ஆர்மியாக படம் முழுவதும் ஸ்கோர் செய்கிறார்.

நாயகியாக நடித்துள்ள நிதி அகர்வால் அவரது கதாபாத்திரத்தை அழகாக நடித்து கொடுத்துள்ளார்.

Bhoomi Movie Review

படத்தில் அம்மா வேடத்தில் நடித்துள்ளார் சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா, ராதாரவி என அனைத்து கதாபாத்திரங்களும் அவர்களின் வேலையை திறம்பட செய்துள்ளனர்.

இசை :

டி இமான் இசை படத்திற்கு பெரிய பலம். பாடல்கள் ரசிக்கும் ரகம்.

ஒளிப்பதிவு :

Dudley-ன் கைவண்ணம் காட்சிகளை அழகாக படமாகி உள்ளது.

இயக்கம் :

இயக்குனர் லட்சுமணன் சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கதைக்களத்தை கையிலெடுத்து அதை திறம்பட கையாண்டுள்ளார்.

விவசாயம் இந்தியாவில் அழிந்து வரும் ஒன்றாக மாறிவரும் நிலையில் இளைஞர்களும் விவசாயத்தில் இறங்கும் வகையில் இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

  1. படத்தின் கதைக்களம்
  2. ஒளிப்பதிவு
  3. இசை

தம்ப்ஸ் டவுன் :

  1. லாஜிக்கல் தவறுகள்
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.