Bhoomi Movie Release Update

ஜெயம் ரவியின் பூமி படம் ரிலீஸில் புதிய திருப்பமாக படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Bhoomi Movie Release Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான அடங்க மறு, கோமாளி உள்ளிட்ட திரைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றன.

இந்தப் படங்களைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் பூமி. இந்த திரைப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க லஷ்மணன் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கவேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனால் படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படியான நிலையில் தற்போது Hot Star-ல் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.