Bharathi Raja Releave from Maanaadu

மாநாடு படத்தில் இருந்து முக்கிய நடிகர் ஒருவர் விலகி இருப்பது சிம்புவையும் படக்குழுவையும் அதிர்ச்சியாக்கி உள்ளது.

Bharathi Raja Releave from Maanaadu : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வந்த ஈஸ்வரன் படப்பிடிப்புகளை முழுமையாக நிறைவு செய்த சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார்.

மேலும் யோகி பாபு, கருணாகரன், பிரேம், பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் வெங்கட்பிரபு டீம் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது பாரதிராஜா படத்திலிருந்து விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது. மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தேதிகளை ஒதுக்குவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இப்படத்தில் இருந்து விலகிக் கொண்டார் என்று கூறப்படுகிறது.

மாநாடு திரைப்படத்திலிருந்து முதல் ஆளாக பாரதிராஜா வெளியேறி இருப்பது சிம்புவையும் படக்குழுவினரையும் அதிர்ச்சியாக்கி உள்ளது.

இவருடைய கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது.