பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் திடீரென மரணம் அடைந்திருப்பது சின்னத்திரை பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Bharathi Kannamma Venkat Passes Away : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மாவின் அப்பாவாக நடித்து வருபவர் வெங்கட். பாரதி கண்ணம்மா மட்டுமல்லாமல் ஈரமான ரோஜாவே உட்பட பல சீரியல்களில் இவர் நடித்து வருகிறார்.

மேலும் வெள்ளித்திரையிலும் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்று மாலை 2 மணி அளவில் இவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். நடிகர் வெங்கட்டின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.