காஜல் அகர்வாலுடன் திருமண கோலத்தில் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
Bharathi Kannamma Agilan With Kajal Agarwal : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த சீரியலில் தற்போது பிரிந்து வாழ்ந்து வரும் பாரதியும் கண்ணம்மாவும் எப்போது சேருவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் நடித்து வரும் அகிலன் காஜல் அகர்வாலுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
இது திருமண விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.