தயவு செய்து அந்த டம்மி பீஸ் உங்களால் வெளியே அனுப்பி விடுங்க என பிக்பாஸ் குறித்து பிரபல நடிகர் ஒருவர் பதிவிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Bharath About Bigg Boss4 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 3 சீசன் முடிவடைந்து நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
உள்ளே சென்றுள்ள போட்டியாளர்கள் பல பெயர் கெட்டுவிடக் கூடாது என எதிலும் ஆர்வம் காட்டாமல் மிக்சர் திண்ணிகளாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது நடிகர் பரத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தயவுசெய்து டம்மி பீசுங்கள பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளிய அனுப்பிடுங்க. அவங்ககிட்ட இருந்து எந்த கண்டெண்ட்டையும் பார்க்கல என பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து இந்த பதிவு குறித்து பிரேம்ஜி நாம ரெண்டு பேரும் உள்ளே போகலாமா என கேட்டுள்ளார். அதற்கு பரத் நீங்க பார்க்க ஆசைப் படுகிறீர்களா என கேட்க, உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான் என பதிலளித்துள்ளார் பிரேம் ஜி.
பரத்தின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் யார் அந்த டம்மி பீஸ்ங்க என கேள்வி எழுப்பி வருகின்றனர்.