Gayathri in Bigg Boss 4
Gayathri in Bigg Boss 4

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Beginning Date of Bigg Boss4 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக தொகுப்பாளராக அறிமுகமாகி உள்ளார்.

முதல் மூன்று சீசன்களை வெற்றிகரமாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் அடுத்ததாக நான்காவது சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார்.

நான்காவது சீசனுக்கான முதல் ப்ரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு; குழப்பத்தில் மக்கள்!

நடிகர் கமல்ஹாசனின் வித்தியாசமான லுக்கில் இருந்த இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பிக் பாஸ் சீசன் 4 தொடங்குவது எப்போது? என கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசன் வரும் அக்டோபர் 10ஆம் தேதி முதல் ஒளிபரப்பு செய்யப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் புரோமோ வீடியோவில் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.