Beauty Tips : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Beauty Tips :

* ஒவ்வொருவரின் சருமத் தோலிலும், நுண் துளைகள் காணப்படும். இவை, உடலில் சேரும் கழிவுகள், தண்ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றை வெளியேற்ற உதவுகிறது. அழுக்குகள் வெளியேராமல் இருப்பது முகப்பரு, கரும்புள்ளி வர முக்கிய காரணமாக உள்ளது. ஆகவே தோல்களில் உள்ள அழுக்கை நீக்குவதற்கான வழிமுறைகளையும் பார்ப்போம்.

* வீட்டில் மேற்கொள்ளும் சிகிச்சை முறைகள்:

முதலில் தோலை சுத்தப்படுத்த 5 நிமிடங்கள் ஆவி பிடித்த பின், தோலில் விரிவடைந்த நுண் துளைகளை சரி செய்வதற்கான பராமரிப்புகளை மேற்கொள்ளலாம்.

1) மசிக்கப்பட்ட தக்காளியுடன் சில துளி எலுமிச்சை சாறை கலந்து முகத்தில் தேய்த்து கழுவினால், சிறப்பான பலன் கிடைக்கும்.

2) ஆரஞ்சு தோல் பவுடர், ஓட்மீல் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு, அதற்கு இரண்டு பங்கு தேன் மற்றும் ஒன்றரை பங்கு அளவிற்கு தயிர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி, 5 நிமிடங்கள் முதல் 7 நிமிடங்கள் வரை, வட்ட இயக்கத்தில் நன்கு தேய்த்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

3) கடலை மாவு கலவையுடன் கஸ்தூரி மஞ்சளை சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் மசாஜ் செய்வதுபோல் தடவி 20 நிமிடங்கள் ஊற வைத்துபின் கழுவி விட முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.

4) ஓட்மீலுடன் வெள்ளரிச்சாறை கலந்து முகத்தில் பூசி 2 நிமிடங்கள் முதல் 3 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவலாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.