BB Vijayalakshmi Emotional Video
BB Vijayalakshmi Emotional Video

அது உங்களைக் கொன்று விடும் என கண்ணீருடன் பிக் பாஸ் விஜயலஷ்மி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

BB Vijayalakshmi Emotional Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் விஜயலட்சுமி. வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் விஜயலட்சுமியை எதிர்பார்க்கலாம்.

மேலும் இவர் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியலில் கமிட்டாகி நடிக்கத் தொடங்கினார்.

சில காலங்களிலேயே இந்த சீரியலில் இருந்து விலகி கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே சென்றார்.

OMG.. துளியும் மேக்கப் இல்லாம இப்படியா இருப்பீங்க?? திரிஷா வெளியிட்ட ஷாக்கிங் புகைப்படம்!

பிக் பாஸ்க்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் மன அழுத்தம் குறித்து பதிவு செய்துள்ளார். உங்களுக்குள் இருக்கும் மன அழுத்தத்தை வேதனைகளால் கொன்று விடுங்கள். புன்னகையுடன் சவால் விட்டு எதிர் கொள்ளுங்கள். இல்லை என்றால் அது உங்களை கொன்று விடும் என விஜயலட்சுமி கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் எம்எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் மறைவை அடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் மன அழுத்தம் குறித்து பேசி வருகின்றனர். விஜயலட்சுமியும் அது குறித்து தான் தன்னுடைய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் விஜயலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டைலாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.