BB Tharshan Eviction Secrets : சேனல் செய்த ஏமாற்று வேலை? | Bigg Boss tamil | Bigg Boss Tamil 3 | Kamal Haasan | Tamil Cinema News
ரசிகர் ஒருவரின் டீவீட்டால் தர்ஷன் எவிக்ஷனில் விஜய் டிவி ஏமாற்று வேலை செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

BB Tharshan Eviction Secrets : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

தர்ஷன் தான் டைட்டிலை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அவர் வெளியேற்றப்பட்டார்.

விஜய் கூட சேர்ந்து நடிக்கணும்னு எனக்கும் ரொம்ப நாள் ஆசை – பார்த்திபன் ஓபன் டாக்.!

தர்ஷனின் வெளியேற்றம் நிச்சயம் மக்களின் முடிவல்ல என பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் தற்போது ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், அந்த டீவீட்டில் விஜய் டிவி தரப்பில் இருந்து தர்ஷனின் குடும்பத்திற்கு போன் செய்து அவர் பைனலுக்கு சென்று விட்டார். இந்த ஒரு வாரத்திற்கான உடைகளை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளது.

தலயா? தளபதியா? டிவி சேனல் நடத்திய கருத்து கணிப்பு – அதிர வைக்கும் இறுதி முடிவு இதோ.!

ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் தர்ஷனை வெளியேற்றியுள்ளது என அந்த ரசிகர் குறிப்பிட்டுள்ளார்.

அப்போ யார் வெளியே செல்ல வேண்டும்? யார் உள்ளே இருக்க வேண்டும் என்ற முடிவை யார் எடுப்பது? என ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.