Pottu Movie

Pottu Movie : சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதியை தொடர்ந்து பிரபல நடிகர் பெண்ணாக நடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்கள் தங்களது படங்களில் பெண் வேடமிட்டு நடித்தால் அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பொதுவாகவே இரட்டிப்பாகி விடும்.

அதற்கான உதாரணமாக இதுவரை நடிகர் பெண் வேடமிட்டு நடித்த பல தமிழ் படங்களை கூறலாம். சமீபத்தில் கூட சிவகார்த்திகேயன் ரெமோ படத்தில் பெண்ணாக நடித்திருந்தார்.

தற்போது விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் படத்தில் பெண்ணாக நடித்துள்ளார். இவர்களை தொடர்ந்து நடிகர் பரத்தும் பொட்டு திரைப்படத்தில் பெண்ணாக நடித்துள்ளார்.

வடிவுடையான் இயக்கியுள்ள இந்த படத்தில் பரத்துடன் இணைந்து நமிதா, இனியா, ஸ்ருதி டாங்கே மற்றும் பல நடித்துள்ளனர்.

இந்த படம் வரும் மார்ச் 8-ம் தேதி முதல் திரைக்கு வர உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெண் வேடமிட்டு நடித்துள்ள பாரத்திற்கு இந்த படம் ஹிட் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Pottu Movie

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.