Oviya Army

நடிகை ஓவியாவை அக்கா என அழைத்து பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் பிக்பாஸ் 4 பிரபலம்.

Balaji Wishes to Oviya : தமிழ் சினிமாவில் களவாணி என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் ஓவியா. அதன் பின்னர் சில படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. இதனையடுத்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்று மிகவும் பிரபலம் அடைந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. இவர் நேற்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். தல ரசிகர்கள் பலரும் ஓவியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறினர்.

பிக்பஸ் சீசன் 4 பிரபலமான பாலாஜி முருகதாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஓவியாவின் காமன் டிபி புகைப்படத்தை வெளியிட்டு ஹாப்பி பர்த்டே அக்கா என பதிவிட்டிருந்தார். முருகதாஸ் ஓவியாவை அக்கா என அழைப்பதை பார்த்த ரசிகர்கள் நீங்களும் ஓவிய ஆர்மியா உற்சாகமடைந்துள்ளனர்.

இவருடைய இந்த பதிவு சமூக வலைதளப் பக்கங்களில் தீயாக பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.