Balaji Murugadoss Live Chat With Fans

ஆரி அர்ஜுனனுடன் இணைந்து நடிப்பீர்களா ரசிகர் கேட்ட கேள்விக்கு பாலாஜி முருகதாஸ் பதில் அளித்துள்ளார்.

Balaji Murugadoss Live Chat With Fans : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

டைட்டில் வின்னராக ஆரி மற்றும் ரன்னராக பாலாஜி முருகதாஸ் தேர்வாகினர். இவர்களுக்கு இடையே பிக் பாஸ் வீட்டில் அடிக்கடி மோதல் உருவானது.

இந்த நிலையில் பாலாஜி முருகதாஸ் லைவ் வீடியோவில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

அப்போது புதுசா படம் ஏதாவது பண்றீங்களா என கேட்டதற்கு ஏற்கனவே நடித்த படம் ஒன்று அடுத்த மாதம் வெளியாக உள்ளது. அதில் சிறு கேரக்டரில் நடித்துள்ளேன்.

ஹீரோவாக நடிக்க நிறைய ஸ்க்ரிப்ட் வருகிறது. நல்ல கதை அமைந்தவுடன் ஹீரோவாக நடிப்பேன் என கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இன்னொரு ரசிகர் ஆரி அர்ஜுனுடன் இணைந்து நடிப்பீர்களா என்று கேட்டதற்கு இருவருக்கும் நல்ல கதாபாத்திரம் அமைந்தால் நிச்சயம் சேர்ந்து நடிப்பேன் என கூறியுள்ளார்.

எங்கள் இருவருக்கும் இடையே எந்தவித தனிப்பட்ட பிரச்சனையும் இல்லை. போட்டியாளர்கள் யாரிடமும் எனக்கு தனிப்பட்ட பிரச்சனை இல்லை. அவர்கள் விளையாடிய கேம் பிடிக்கவில்லை அதனால் தான் சண்டை வந்தது என கூறியுள்ளார்.

மேலும் பிக் பாஸ் வீட்டில் மிகவும் பிடித்தது யார் என கேட்டதற்கு அது உங்களுக்கே தெரியும் என சிவானி தான் பிடித்தவர் என்பதை மறைமுகமாக கூறியுள்ளார்.

நிச்சயம் விவசாயம் செய்வேன். மேடையில் பேசியதை சும்மா பேசியதை இல்லை. சில வேலைகள் இருக்கிறது அதை முடித்தவுடன் நிச்சயம் விவசாயம் செய்வேன் என தெரிவித்துள்ளார்.