Balaji Murugadoss Blast BB Title Winners

வெட்டியா வேர்கடலை சாப்பிட்டவன் எல்லாம் டைட்டிலை வெல்ல கூடாது என பாலாஜி முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

Balaji Murugadoss Blast BB Title Winners : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசனல் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று இருப்பவர் பாலாஜி.

பிக்பாஸ் சீசன் 4 ரசிகர் மத்தியில் மிகவும் பேசப்படும் ஒன்றாக மாறியதற்கு பாலாஜி பெறுவதற்கு முக்கிய காரணம் என கூறலாம். தினம்தினம் போட்டியாளர்களிடம் சண்டையிட்டு நிகழ்ச்சியை விறுவிறுப்பாக வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்திய எபிசோட் ஒன்றில் அனிதாவுடன் அமர்ந்து பேசிய போது சும்மா வேர்க்கடலை சாப்பிட்டவன் எல்லாம் டைட்டிலை வெல்லக் கூடாது. அந்த நிலை மாற வேண்டும் எனக் கூறுகிறார்.

அதற்கு அனிதா ஓட்டு போட்டது மக்கள் தானே என கூறுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை டைட்டில் வென்ற ஆரவ், ரித்விகா மற்றும் முகேன் ராவ் ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்காக பெரிய அளவில் கஷ்டப்படவில்லை என பாலாஜி முருகதாஸ் சொல்லாமல் சொல்வதாக நெட்டிசன்கள் வெளுத்து வருகின்றனர்.