Balaji Murugadoss About Feb14

பிப்ரவரி 14 எல்லாருக்கும் காதலர் தினம் ஆனால் எனக்கு மட்டும் என பாலாஜி முருகதாஸ் பதிவிட்டுள்ள பதிவு ரசிகைகளை உற்சாகப்படுத்தி உள்ளது.

Balaji Murugadoss About Feb14 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆக ஆரி மற்றும் ரன்னராக பாலாஜி முருகதாஸ் வெற்றிபெற்றனர். இந்த நிகழ்ச்சியின் மூலமாக பாலாஜிக்கு என மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.

பாலாஜிக்கு என ரசிகைகள் பலர் உருவாகினர். பாலாஜி பிக் பாஸ் வீட்டில் ஷிவானியுடன் நெருக்கமாக பழகி வந்தார்.

இருப்பினும் தற்போது இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிப்ரவரி 14 காதலர் தினம் ஆனால் எனக்கு மட்டும் முரட்டு சிங்கிள் டே என தெரிவித்துள்ளார்.

பாலாஜியின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அப்போ நீங்க சிங்களா என உற்சாகம் அடைந்துள்ளனர்.