பிக்பாஸ் புகழ் Balaji Murugadoss-ன் தந்தை மரணம் - பிரபலங்கள் இரங்கல் | HD

Balaji Murugadoss Father Passes Away : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் பாலாஜி முருகதாஸ்.

இவருக்கு பிக்பாஸ் வீட்டில் பல விமர்சனங்கள் இருந்தாலும், இறுதி கட்டத்திற்கு சென்று 6 கோடிக்கு மேல் ஓட்டுகளை பெற்று பிக்பாஸ் ரன்னர் ஆனார்.

இந்நிலையில் பாலாஜி முருகதாஸின் தந்தை உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு திடீரென்று காலமானார்.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் பாலாஜி முருகதாசுக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இப்படியான நிலையில் பாலாஜி முருகதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் “இதுவும் கடந்து போகும்”என்று குறிப்பிட்டுள்ளார்.