Bail plea filed by P Chidambaram
Bail plea filed by P Chidambaram

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடக்க உள்ளது.

ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் முறைகேடு நடந்ததாக, சிபிஐ சார்பாக கடந்த ஆகஸ்ட், 21-ஆம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இரண்டும் தனி தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கினார்கள்., இருப்பினும் அமலாக்கத்துறை ப. சிதம்பரத்தை கைது செய்து விசாரித்தது. இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், தற்போது திகார் சிறையில் உள்ளார்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக ப. சிதம்பரம் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில் நவம்பர் 14ம் தேதி நடந்த வழக்கில், டெல்லி ஹைகோர்ட் நீதிபதி சுரேஷ் கெய்த், சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க மறுத்து, தீர்ப்பை வழங்கினார். இந்நிலையில் டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பிற்கு எதிராக ப.சிதம்பரம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. எனவே ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடக்க உள்ளது.

முன்னதாக டெல்லி ஹைகோர்ட் நீதிபதி சுரேஷ் கெய்த் தன்னுடைய தீர்ப்பில், அமலாக்கத்துறை வாசகத்தை அப்படியே பயன்படுத்தி உள்ளார் எனவும், இன்னொரு பக்கம் நீதிபதி கைத் ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பின் வாசகங்களை வெட்டி சிதம்பரத்திற்கு வழங்கிய தீர்ப்பில் ஒட்டி இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

மேலும் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரோகித் டண்டன் என்பவரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பில் இருந்த சில வரிகள் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இதில் உள்ளதாகவும், அதோடு தீர்ப்பில் இருக்கும் இந்த தவறுகளை சுட்டி காட்டிய ப. சிதம்பரம், தன்னுடைய உடல் நலத்தையும் சுட்டி காட்டி தனக்கு ஜாமீன் கோரியுள்ளார். இந்நிலையில் ப. சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று காலை நடக்க உள்ளது.