Bahubali 3

விரைவில் பாகுபலி‌ 3 திரைப்படம் உருவாக இருப்பதாகவும் இதனை OTT வழியாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Bahubali 3 Movie Update : தெலுங்கு சினிமாவில் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் என பல நடிகர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் பாகுபலி. முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாம் பாகமும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. ஆயிரம் கோடிக்கு மேல் இந்த திரைப்படம் வசூல் செய்தது.

இப்படத்தைத் தொடர்ந்து எஸ்எஸ் ராஜமவுலி தற்போது RRR என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு பிறகு அவர் பாகுபலி படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு பதிலாக OTT-யில் ஒன்பது பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால் பாகுபலி படத்தின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.