Bahat Basail As Villian in Vikram Movie

விக்ரம் படத்தில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Bahat Basail As Villian in Vikram Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் மக்கள் நீதி மையம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக இந்தியன்2 மற்றும் விக்ரம் என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இந்தியன் 2 திரைப்படத்தை ஷங்கர் இயக்க விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

தேர்தல் முடிந்ததை தொடர்ந்து கமல் அடுத்ததாக விக்ரம் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தில் கமலுக்கு வில்லனாக பகத் பாஷில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.